காமராஜர் கொள்கைகள் ஆய்வு மையம்  (Kamarajar Principles Research Centre)

ஆய்வு மையமானது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடிசெலவில் சுமார் 1 லெட்சம் மக்களின் ஒத்துழைப்புடன் அமைய உள்ளது

காமராஜர் கொள்கைகள் ஆய்வு மையத்தில் ஒரு நூலகம் அமைக்கப்படும். அங்கு காமராஜர் பற்றிய நூல்கள், அவரது பேச்சுக்கள் அடங்கிய நூல்கள். இந்திய விடுதலை போரில் அவரது பங்கேற்பு, தமிழக அரசியலில் அவரின் பங்களிப்பு, தமிழக முதல்வராக அவரின் செயல்பாடுகள், தமிழகத்தில் தாழ்த்தபட்டோரின், பிற்படுத்தப்பட்டோரின் சமூக் நீதிக்காக அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள். இந்திய அரசியலில் அவர் “KING MAKER” ஆக எவ்வாறு திகழ்ந்தார் என்பது போன்ற நூல்கள் இடம் பெறும்.

  • காமராஜர் தொடர்புடைய புகைப்படங்களின் நிரந்தரக் கண்காட்சி அமைக்கப்படும்.
  • காமராஜர் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சியும் அமைக்கப்படும்.
  • கணினியில் அவர் பற்றிய அனைத்துத் தகவல்களும் தகவல் களஞ்சியமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
  • காமராஜர் பற்றி, மாதம் ஒரு சொற்பொழிவு அங்கு நடத்தப்ப்டும்.

இவை அனைத்தும் காமராஜர் பற்றி, காமராஜரின் கோட்பாடுகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆய்வு மையம் அமைக்க தூண்டியவைகள்

இந்த சிந்தனை இன்று, நேற்று பிறந்ததன்று, 2017ல் இதற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டது.

அற்க்கட்டளையின் கோரிக்கையை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக சின்டிகேட் 25.01.2018ல் ஏற்றுக் கொண்டது.

கட்டடம் கட்டுவதற்காக ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருக்கை அமைப்பதற்கு மூன்று கோடி ரூபாய்கள் கட்ட வேண்டியுள்ளது.

ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தவருக்கு ஒரு பொற்கால ஆட்சியைத் தந்தவருக்கு ஒர் இருக்கை அமைப்பதை தமிழக அரசு அங்கீகரித்து முடிந்த நிதி உதவியையும் வழ்ங்கிட வேண்டுமென்க் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் தமிழக அரசை வேண்டிக்கேட்டுக் கொள்வதெல்லாம், முழு நிதியையும் தமிழக அரசு அளிக்கத் தேவையில்லை. மண்ணின் மைந்தனுக்கு இருக்கை அமைப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. இதில் ஒவ்வொரு தமிழனும் பங்கெடுத்துக்கொள்வான். இந்த தலைவனுக்கு தங்களின் நன்றிக் கடனைத் தீர்க்க ஒவ்வொரு தமிழனும் நன்கொடை அளிப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இந்த இருக்கைபற்றிய கேள்வியைச் சட்ட மன்றத்தில் எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்ட மன்றத் தலைவர் திரு. கே. ஆர். இராமசாமி அவர்களுக்கும், இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கோபண்ணா அவர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர் திரு. பிரின்ஸ் அவர்களுக்கும், பதிலளித்துப் பேசிய அமைச்சர் மாண்புமிகு  மாஃபா. பாண்டியராஜன் அவர்களுக்கும், எங்களுக்கு உறுதியும், ஊக்கமும் அளித்த மாண்புமிகு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. ஜெயகுமார் அவர்களுக்கும் எங்கள் உள்மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றொம்.

இந்த தமிழக மண்ணை கல்வியில், தொழிலால் தூக்கி நிறுத்திய மாமனிதர் கர்மவீரர் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மக்கள் முன்னேற்றத்தை மட்டும் முன்னிறுத்திவிட்டு செல்லவில்லை. தமிழகம் சிறந்தோங்க நல்லாட்சியையும் செய்து,மேல் இருந்து கீழ்வரை அனைத்து மக்களுக்க்கும் சமநீதியை தந்து, நேர்மையின் வலுவை தமது தமிழக மக்களுக்க்கு இன்றுவரை புரியவைத்தார். ஒவ்வோரு மதத்திற்கும் தம் மக்கள் இப்படிதான் அறநெறியுடன் வாழ வேண்டும் என்பதறகாக வேதநூல் உள்ளது. எது தவறு? எது சரி? என தம் மக்களுக்கு புரியவைக்கும் முன் மாதிரியாக அந்த நூல் விளங்கிறது. அதேபோல் நீதிதுறையிலும் சட்ட புத்தகத்தில் எழுதியுருப்பதை தாண்டி வரும் புது புது வழக்குகளுக்கு அத்தாரிடியன முந்தைய வழக்கே அமைகிறது. அரசியலுக்கு அப்படி ஒரு வேத புத்தகம், சட்டபுத்தகம் உள்ளனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் ஒரு மனிதரின் வாழ்க்கை, ஆட்சிமுறை அந்த முன்மாதிரியாக அத்தாரிடியாக இன்றுவரை விளங்குகிறது. அவர்தான் “காமராஜர்

காமராஜர் வாழ்ந்த முறை, ஆட்சியின் செயல்பாடுகள், இவைதான் அரசியலுக்கும், ஆட்சிமுறைக்கும் வழிக்காட்டியாக, வேதநூலாக நமக்கு விளங்குகிறது. ஆனால் அந்த வேதநூல் எழுதப்பட்டிருக்கிறதா என்றால்? இல்லை. இந்த தலைமுறையின் இறுதியில் இருக்கும் நம் சிலருக்கே தெரிந்த அந்த ஒழுக்க நேர்மை அரசியல் நடைமுறை இன்னும் எத்தனைக்காலம் உயிருடன் இருக்கும்? நம் தலைமுறையுடன் அழிந்துவிட வேண்டியதுதானா? நம் வருங்கால சந்ததியினர்களுக்கு ஆட்சியின் தூய்மை, நேர்மை, வாய்மை தெரியாமல் போய்விடுமோ என்கிற கேள்வி எழுந்தபோது எங்களுக்கு தோன்றியது “KAMARAJ POLITICAL DISIPILENE & PRINCIPILES “ ஆராய்ச்சி கல்வியை ஏன் துவக்க கூடாது என்று. நமது வருங்கால சந்ததியினர்களுக்கு சொத்து சுகத்தை சேர்த்து வைத்துவிட்டு செல்லும் நாம், அவர்கள் அதை பாதுக்காப்பாக அனுபவிக்க வாழ ஒரு நல்ல அரசியலையும் வைத்துவிட்டு செல்ல வேண்டாமா. நல்ல ஒரு அரசு அமையாத எந்த நாடும் உலகில் அழிந்ததாகத்தான் வரலாறு. நாம் நம் செல்வங்களை ஒரு நல்ல அரசில், ஆட்சியில் வாழ வழிவகை செய்யாது செல்லலாமா. நாட்டின் வளர்ச்சியும்,

முன்னேற்றமும், அதோடு நல்ல பாதுகாப்பு என்பதையும் ஒரு நல்ல ஆட்சியாளரால்தான் தரமுடியும், அந்த நல்லாட்சி தருபவர் யார்? நமது வருங்கால நம் செல்வங்கள். அவர்களே, இந்த நாட்டின் வருங்கால தலைவர்கள் அவர்கள் நல்வழியில் வாழ்ந்திட ஒரு வழிகாட்டும் நூல் வேண்டாமா? ஒரு கைடு புத்தகம் வேண்டாமா அதை உருவாக்குவதே நமது “KAMARAJAR PRINCIPLES RESEARCH CENTRE “ –ன் பணி.

இதற்காக ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் ஏற்றப்பட வேண்டும். அவை அத்தாரிட்டியாக காணப்பட வேண்டும் என்றால் அதை ஆய்வாளர்கள் மூலமே புத்தகமாக பதியவேண்டும். ஆகவே உடன் ஒரு அறக்கட்டளையை பதிவு செய்து கொண்டு மதுரை காமரஜ் பல்கலைகழகத்தை அனுகி எங்களின் விருப்பத்தை, பல்கலைகழகத்தை அனுகி எங்களின் விருப்பத்தை, வேண்டுதல்களை துணைவேந்தரிடம் தெரிவித்தோம்.அவரும் முக ஆவலுடன் உடன்
நடவடிக்கை மேற்கொண்டு அதன் பேரில் பல்கலைகழக சிண்டிகேப்பை கூட்டு விவாதித்து எங்களுக்கு KAMARAJAR PRINCIPALS ஆராய்ச்சி மையத்தை பல்கலைகழக வளாகத்தில் 10 ஆயிரம் சதுரடியில் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கினார். மேற்படி ஆராய்ச்சி மையத்தின் கட்டிடம் கட்டவும், பேராசிரியர், பணியாளர்கள் ஊதியம் நிர்வாக செலவிற்காக ரூபாய் மூன்றரை கோடி தேவைப்படுகிறது. இதில் பேராசிரியர் பணியாளர்கள் ஊதியத்திற்காக பல்கலைகழகத்தில் Deposit செய்ய வேண்டிய ரூபாய் ஒன்றறை கோடியும் சேர்ந்ததே.

நல் மனம் கொண்ட பெரியோர்களே, நமது சந்ததிகளின் எதிர்கால் நன்மை கருதி, இந்த மண்ணின் எதிர்காலம் கருதி, இந்த மாபெரும் மக்கள் வருங்கால நலம் சார்ந்த சமூக பணிக்கு பெறும் மனதுடன் வழங்கிட வேண்டுகிறோம்.