இருக்கை ஏன் ?
-
- கல்வி கண் திறந்த கடவுள்
- கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் இலவசக் கல்வியும் மதிய உணவும் அளித்துக் கல்வி கற்க வைத்த மாமனிதர்
இருக்கை அவருக்கு இல்லாமலா ?
இன்றைய தலைமுறையினர் காமராஜர் பற்றிப் படிக்கும் போதும், கேள்விப்படும் போதும் இப்படிக்கூட
- ஓர் அரசியல்வாதி இருந்தாரா ?
- ஒரு தலைவர் இருந்தாரா ?
- ஒரு மனிதன் இருந்தாரா ?
-
- என வியந்து போகின்றனர்.
இளம் தலை முறையினருக்கு இன்னும் கூடுதலாக அவரைக் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை. வரும் தலைமுறையினர் அவரைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ளச் செய்யப்படும் வசதிதான் இந்த இருக்கை.
-
- குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து அதுவரை மூடப்பட்டிருந்த பள்ளிகளைத் திறந்து அதற்கு மேலும் மூன்று மடங்கு கூடுதலான் பள்ளிகளைத் திறந்தவர்.
- பிற்பட்ட இனத்துக்கான இட ஓதுக்கீட்டை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர்.
- அரசியலில் உண்மை!
- ஆட்சியில் நேர்மை!
- வாழ்வில் எளிமை!!!
- அரசியல் எதிரிகளும் போற்றும் ஆளூமை.
- பிரச்சினைகளை அணுகுவதிலும் தீர்வுகளை வழங்குவதிலும் ஒரு கிராமத்தானின் எளிமை.
- தமிழகத்தில் அவரது ஆட்சிக்கால்த்தில் ஒன்பது அணைகள் கட்டியவர்.
- I.C.F, நெய்வேலி, BHEL, போன்ற பல தொழிற்சாலைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தவர்.
இப்படிப்பட்ட மக்கள் தலைவனுக்கு அவர் பெயரினால் இயங்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் ஓர் இருக்கை அமைப்பது சாலச் சிறந்தது தானே ?